Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்னபூரணி தோல்வியால் நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்துக்கு வந்த சிக்கல

அன்னபூரணி தோல்வியால் நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்துக்கு வந்த சிக்கல
, செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:14 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்தார். அந்த படம் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் மழை பொழிந்தது.

இதையடுத்து நயன்தாராவின் சமீபத்தைய ரிலீஸாக அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம்  மோசமான திரைக்கதை மற்றும் சென்னை வெள்ளம் உள்ளிட்ட பல காரணங்களால் படுதோல்வி அடைந்தது. இந்த படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் 10 கோடி ரூபாயாம். சம்பளத்தை அடுத்தடுத்த படங்களுக்கு ஏற்றி வந்தாலும், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படங்களின் கலெக்‌ஷன் அடிவாங்கிக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாரா கதாநாயகியாக அடுத்து நடித்து வரும் ‘மண்ணாங்கட்டி’ என்ற படத்துக்கு இது சிக்கலை உருவாக்கியுள்ளது. அன்னபூரணி படுதோல்வியால் மண்ணாங்கட்டி படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி தயாரிப்பு நிறுவனம் இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை முதலில் இயக்க இருந்தது இவரா?