Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லோகா நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் படுதோல்வி ஆகியிருக்கும்… பிரபல தயாரிப்பாளர் கருத்து!

Advertiesment
கல்யாணி ப்ரியதர்ஷன்

vinoth

, புதன், 22 அக்டோபர் 2025 (08:30 IST)
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ரிலீஸான  ‘லோகா’படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் பட்டியலில் இணைந்துள்ளது.  துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸானது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ‘லோகா’. 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு தமிழ்நாடு மற்றும் தெலுங்கு பேசும் மாநிலங்களுக்கு உண்டு. அந்தளவுக்கு வெளிமாநிலங்களில் வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாகவம்சி ‘லோகா’ பற்றி தெரிவித்துள்ளக் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “ லோகா- திரைப்படம் நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக படுதோல்வி படமாகதான் ஆகியிருக்கும். அந்த படத்தின் மெதுவாக நகரும் தன்மை கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசியக் கோப்பை வேண்டுமென்றால் என்னை வைத்து விழா நடத்துங்கள்… மோசின் நக்வி உறுதி!