நூறாவது படத்தில் மீண்டும் இணைகிறதா நாகார்ஜுனா- தபு ஜோடி..!

vinoth
சனி, 11 அக்டோபர் 2025 (14:09 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தன்னுடைய 64 ஆவது வயதில் இப்போதும் ஹீரோவாகக் கலக்கி வருகிறார். சமீபத்தில் கூலி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து கேலிகளுக்கு உள்ளானார்.

நாகார்ஜுனா ரட்சகன் படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமானார் . அந்த படம் வணிக்க ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போது கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாகார்ஜுனா தன்னுடைய 100 ஆவது படத்தைத் தொடங்கினார்.

இந்த படத்தை தமிழ் இயக்குனர்  ரா கார்த்திக் இயக்குகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவோடு தபு ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 90 களில் நாகார்ஜுனா தபு ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடியாக இருந்தனர். அவர்களுக்குள் காதல் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments