Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதைப் பற்றி தைரியமாக பேசியதற்கு நன்றி ராஷ்மிகா.. மிருனாள் தாக்கூர் ஆதரவு!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (10:27 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில்,  ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில் நடிகை ராஷ்மிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “தொழில்  நுட்பம் மூலம் இப்படி தவறானப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இது எனது பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதுபற்றி தெரியப்படுத்த வேண்டும்” என வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் வெட்கப்படவேண்டும்.  அவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லை. பலரும் பேசாத இந்த விஷயம் பற்றி ராஷ்மிகா பேசியதற்கு அவருக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் இதுபோல நடிகைகளின் மார்ஃப் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் உலவுகின்றன. ” என வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments