Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளரை மாற்றும் ராஜமௌலி?

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (10:19 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் போல ஒரு சாகசப் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்நிலையில் இந்த படத்துக்காக தன்னுடைய நீண்ட நாள் ஒளிப்பதிவாளரான கே கே செந்தில்குமாரை விட்டு விலகி பி எஸ் வினோத்தோடு பணியாற்ற உள்ளாராம் ராஜமௌலி. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறந்த நாளில் ஜனநாயகன் அப்டேட் வேண்டாம்.. ஃபுல்லா அரசியல் தான்: விஜய் அதிரடி..!

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments