Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஷ்மிகா மந்தனா தொடர்பான மார்பிங் வீடியோ- அமிதாப் பச்சன் கண்டனம்

amithap pachan
, திங்கள், 6 நவம்பர் 2023 (16:42 IST)
இந்தி சினிமாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். இவர் ராஷ்மிகா மந்தனா பற்றிய DeepFake Edit வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இந்தி சினிமாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். இவர், பிரபாஸுடன் இணைந்து கல்கி படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தலைவர் 171 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகாவின் DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில் இதற்கு அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  ''நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான போலி வீடியோ விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா ‘’இணையதளத்தில் வைரலாகி வரும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட DeeoFake Edit வீடியோ பற்றி பேசுவதற்கு வருத்தமாக உள்ளது.

தொழில்  நுட்பம் மூலம் இப்படி தவறானப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இது எனது பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதுபற்றி தெரியப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ! இயக்குனர் இவர்தான்!