கலை துறைக்காக மத்திய அரசு வழங்கும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அவ்விருது பிரபல மலையாள நடிகர் மோகன் லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருபவர் மோகன்லால்.
முதலில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால் மெல்ல மெல்ல கதாநாயகனாக உயர்ந்து 80 களில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரானார். அப்போது முதல் இப்போது வரை வணிக ரீதியான பொழுது போக்குப் படங்கள், கலைப்படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இதுவரை நான்கு முறை தேசிய விருது வென்றுள்ளார்.
இந்நிலையில் தாதா சாகேப் பால்கே விருது வென்ற மோகன்லாலுக்கு லால் சலாம் என்ற பெயரில் கேரள மாநில அரசு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் நான்காம் தேதி நடக்கும் இந்த விழாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நடிக்கவுள்ளனர்.