Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலையாள சினிமாவில் யாரும் படைக்காத சாதனையை முதல் படத்திலேயெ நிகழ்த்திய சாய் அப்யங்கர்!

Advertiesment
ஸ்பாட்டிஃபை

vinoth

, சனி, 27 செப்டம்பர் 2025 (08:36 IST)
கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ மற்றும் ‘சித்திரி புத்திரி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’, சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம், சிம்பு நடிக்கும் அவரின் 49 ஆவது மற்றும் 51 ஆவது படம் மற்றும் அட்லி அல்லு அர்ஜுன் இணையும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்துக்கும் அவர்தான் இசை என சொல்லப்படுகிறது. தற்போது அவர் கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அவரின் முதல் ரிலீஸாக மலையாளப் படமான ‘பல்டி’ ரிலீஸாகியுள்ளது. இந்த படத்துக்காக அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட அவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யகுமார் யாதவ்வுக்கு 30 சதவீத போட்டிக் கட்டணம் அபராதம்.. ஐசிசி உத்தரவு!