Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெய்பீம் ஞானவேலின் அடுத்த படம் ‘தி தோசா கிங்’… முக்கிய வேடத்தில் மோகன்லால்!

Advertiesment
ஜீவஜோதி

vinoth

, ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (13:56 IST)
தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது உறவினர் கருப்பு முருகானந்தத்தின் சிபாரிசால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் சரவண பவன் ராஜகோபாலுக்கு எதிராக வழக்கு நடத்திப் போராடிய ஜீவஜோதியின் வாழ்க்கையை ‘தோசா கிங்’ என்ற பெயரில் இயக்குனர் ஞானவேல் படமாக எடுக்கவுள்ளார். ஜீவஜோதி வழக்கு நடந்தபோது பத்திரிக்கையாளராக அந்த வழக்கை நேரில் பார்த்தவர் ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் சரவணபவன் அண்ணாச்சி வேடத்தில் நடிக்க மோகன்லாலிடம் ஞானவேல் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வாரத்தில் 150 கோடி ரூபாய்… மின்னல் வேகத்தில் செல்லும் ‘லோகா’ படத்தின் வசூல்!