மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மோகன் லால். கடந்த 40 ஆண்டுகளாக அவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து மலையாளம் தாண்டியும் அறியப்பட்ட நடிகராக உள்ளார். இந்த ஆண்டில் அவரின் லூசிஃபர் மற்றும் துடரும் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாகி சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளன.
மோகன்லாலின் மகன் பிரணவ் ஏற்கனவே மலையாள சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மயா நடிகராக தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடங்குகிறார்.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் துடக்கம் என்ற படத்தில் விஸ்மயா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்க உள்ளது.