Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

Advertiesment
நடிகர் அஜித்

Siva

, திங்கள், 30 ஜூன் 2025 (18:47 IST)
நடிகர் அஜித் ஒரு படத்திற்குக் கால்ஷீட் கொடுத்தால், பல முன்னணி நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கும் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, 'குட் பேட் அக்லி' என்ற வெற்றி படத்திற்கு பிறகு அஜித்தின் மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது. ஆனால், இந்த சூழலில், அஜித் படத்தை தயாரிக்க ஆள் இல்லை என்றும், அவருடைய படத்தை தயாரிக்க ஐந்து முன்னணி நிறுவனங்கள் மறுத்துவிட்டதாகவும், தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
 
தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனங்களும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனங்களும் அஜித் மற்றும் ஆதிக் இணையும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்று இந்த வதந்திகள் கூறுகின்றன.
 
ஆனால், உண்மையில் அஜித் படத்தை தயாரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகவும், இந்த நபர்கள் கூறுவது முழுக்க முழுக்க பொய் என்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
இந்த இரண்டில் எது உண்மை என்பது இன்னும் தெரியவில்லை. அஜித் மற்றும் ஆகிக் மீண்டும் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே, யார் சொல்வது உண்மை என்பது தெளிவாகத் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..