Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (16:59 IST)
கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக்லைஃப்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே, நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக யூட்யூபில் விமர்சனம் செய்யும் நபர்கள் இந்த படத்தை வச்சு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
 
படம் வெளியான அன்றே, YouTube-இல் விமர்சனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தும் விமர்சகர்களில் ஒருவர் பிரசாந்த் ரங்கசாமி. இவருடைய விமர்சனத்திற்கு ஏராளமான வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இவ்வாறு ‘தக்லைஃப்’ படத்தை விமர்சனம் செய்து உள்ள நிலையில், படத்தை வைத்து கமல்ஹாசனின் நடிப்பில் குறை சொல்ல முடியாது என்றாலும், மணிரத்னம் படுமோசமாக திரைக்கதை எழுதியுள்ளார் என்றும், ஒரு காட்சியில் கூட லாஜிக் இல்லை என்றும் கூறியுள்ளார்.
 
ஒரு படம் என்றால் வெற்றியோ தோல்வியோ அதில் இயக்குனர் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் மணிரத்னம் வேலையே செய்யவில்லை என்றும் விமர்சனத்தில் கூறியுள்ளார்.
 
இவர் தான் நேற்று கன்னட மொழி விவகாரத்திற்கு கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி, ‘தக்லைஃப்’ திரைப்படத்தை நான் திரையரங்கில் ஐந்து முறை பார்த்து கமல்ஹாசனுக்கு ஆதரவு தருவேன் என்று கூறினார். ஆனால், இன்று ஒரு முறை பார்த்ததற்கு படத்தை படுமோசமாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments