Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவை கொஞ்சம் விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துடும்: ரத்தீஸ் குறித்து மாரிதாஸ்

Advertiesment
maridhas

Mahendran

, வெள்ளி, 23 மே 2025 (13:21 IST)
அமலாக்கத்துறை சோதனை காரணமாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவருடைய நண்பர் ரத்தீஷ் ஆகிய தலைமறைவாக இருக்கும் நிலையில் நயன்தாராவை பிடித்து விசாரித்தால் எல்லா உண்மையும் வெளியே வந்து விடும் என்று அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒரே நேரத்தில் மூன்று பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த ஆகாஷ் பாஸ்கர்  வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். அவருக்கு மிகவும் நெருக்கமானவரான ரத்தீஸ் என்பவரும் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் இது குறித்து அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
இந்த நயன்தாரா கொஞ்சம் விசாரிச்சா ரத்தீஸ் பற்றி பெரிய உண்மை வெளி வரும். பிறந்த நாள் , புது வருட கொண்டாட்டம், பார்டீ , பிளாக் மணி டிச்கசன், முதலீடு , வெளி நாட்டு கொண்டாட்டம் என்று எல்லா விதமான தொடர்பும் நயன்தார & அவர் கணவர் பணியில் இருப்பவருக்கு உண்டு. 
 
இவர்களும் விசாரனைக்கு பயந்து தப்பி வேறு நாடுக்கு ஓடிருக்கானுக. எனவே கொஞ்சம் வெளி நாட்டில் இவர்கள் நடமாட்டத்தையும் உற்று கவனிப்பது அவசியம். நாடு திரும்ப வைத்து விசாரணை வட்டத்தில் வளைப்பது மிக அவசியம். (சிவகார்த்திகேயன் , தனுஷ் என நோண்டு வதை விட நயன நோண்டினால் உருப்படியானது. மொத்த சினிமா கூட்டத்தையும் ஒழிச்சு கட்டாமல் விடகூடாது இவனுக ஆடுன ஆட்டத்துக்கு!)

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலி படத்துக்கு யானை விலை சொல்லும் சன் பிக்சர்ஸ்… தயங்கும் விநியோகஸ்தர்கள்!