தமிழ்ப்படம், காவியத்தலைவன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய்நாட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் என்ற படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. நேரடியாக ஓடிடியில் ரிலீஸான டெஸ்ட் திரைப்படம் எந்த வொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஒரு தோல்விப் படமாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் பற்றி எஸ் வி சேகர் இட்ட பதிவு ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதில் “என்னை நடிக்க அழைத்துவிட்டு, பின்னர் வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பினால் அந்த படம் தியேட்டரில் ரிலீஸாகாது. அப்படி ரிலீஸானாலும் ஓடாது” எனக் கூறி டெஸ்ட் படத்தின் போஸ்டரையும் பகிர்ந்திருந்தார். அவரின் பதிவின் கீழ் பலர் சென்று டெஸ்ட் படத்தையும் அவரையும் கேலி செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.