தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கூலி படத்தின் ப்ரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் கர்நாடகா மாநில விநியோக உரிமை 20 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயித்துள்ளதாம் சன் பிக்சர்ஸ். வழக்கமாக ரஜினி படத்துக்கு 5 கோடி ரூபாய் அளவுக்குதான் விலை இருக்குமாம். ஆனால் கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இருப்பதாலும் ரஜினி – லோகேஷ் கூட்டணி இருப்பதாலும் இவ்வளவு பெரிய தொகையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.