மஞ்சு வாரியர் தமிழில் தற்போது சந்தோஷ் சிவன் இயக்கும் செண்ட்டிமீட்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் அசுரன் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் பரவலாக கவனிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் அஜித் 61 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தமிழில் அசுரனுக்குப் பிறகு அடுத்த படமாக சந்தோஷ் சிவன் இயக்கத்தில் செண்ட்டி மீட்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மஞ்சு வாரியரோடு, யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் மூலமாக அவர் தமிழில் பாடகியாகவும் அறிமுகமாகிறார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த அவர், பாடலின் சில வரிகளையும் பாடி, அதை வீடியோவாக வெளியிட இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.