Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த வெப் சீரிஸ் பணிகளைத் தொடங்கிய விஜய் சேதுபதி!

vinoth
சனி, 26 ஏப்ரல் 2025 (10:41 IST)
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக ஒரு வெப் சீரிஸ்க்காக இணைந்தார்கள். தொடரில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷ்ராஃப் நடிக்க ஒப்பந்தமானார். இந்த தொடருக்கு டிஸ்னி நிதியளிக்க முதல் பிரதி அடிப்படையில் மணிகண்டன் தயாரித்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிஸ்னி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த வெப் சீரிஸில் இருந்து மணிகண்டன் விலகினார் என்று சொல்லப்பட்டது.

அதன் காரணமாக அந்த சீரிஸ் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த சீரிஸின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் கேரளாவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீண்டும் மணிகண்டனே இயக்க உள்ளாரா அல்லது வேறு யாரேனும் இயக்குகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

மூன்று நாளில் இத்தனைக் கோடி வசூலா?... படை தலைவன் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஒரு பிச்சைக்காரன் திடீரென கோடீஸ்வரனாக மாறுவது எப்படி? ‘குபேரா’ டிரைலர்..!

காந்தாரா படக்குழுவைத் துரத்தும் சோகம்… ஷூட்டிங்கின் போது படகு கவிழ்ந்து விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments