இந்தியில் பேமிலிமேன் சீசன்கள் மூலம் பிரபலமான வெப்சிரிஸ் இயக்குனர்களாக அறியப்படுபவர்கள் ராஜ் மற்றும் டிகே. இவர்கள் இணைந்து உருவாக்கி அமேசான் ப்ரைமில் வெளியான 8 எபிசோடுகள் கொண்ட வெப்சிரிஸ்தான் “ஃபார்சி (Farzi)”.
மும்பையில் வாழும் திறமைமிக்க ஓவியன் சன்னி (ஷாகித் கபூர்), யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியமான கள்ள நோட்டுகளை வடிவமைத்து அச்சிட, அவரை கண்டுபிடிக்கும் போலீஸாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பரவலாக பார்வையாளர்களை சென்றடைந்தது இந்த தொடர்.
இதனை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இயக்குனர்கள் ராஜ் & டி கே ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அதன் ஷூட்டிங் தொடங்கும் எனவும் அடுத்த ஆண்டில் ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரே இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.