Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் சர்தார் 2.. ஆனாலும் இன்னும் அந்த பிஸ்னஸ் நடக்கவில்லையாம்!

vinoth
சனி, 26 ஏப்ரல் 2025 (10:37 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு அதில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் எஸ் ஜே சூர்யா பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல்  வியாபாரம் இன்னும் நடக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஹிட்டடித்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்கே இன்னும் ஓடிடி வியாபாரம் நடக்கவில்லை என்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments