Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகார்ஜுனா மகன் படத்தில் மம்மூட்டி… முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம்!

நாகார்ஜுனா மகன் படத்தில் மம்மூட்டி… முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம்!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (16:43 IST)
அகில் நடிக்கும் ஏஜெண்ட் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் படத்தில் மம்மூட்டி நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் புதிய படமான ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க மோகன் லால் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிடவே இப்போது மம்மூட்டியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவரும் சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் இப்போது மம்மூட்டி ஒரு ராணுவ அதிகாரியாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷும் உண்டு… சிவகார்த்திகேயனும் உண்டு – இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படங்கள்!