நடிகர் நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 12 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளாராம்.
தென்னிந்திய மொழிகளில் மிக முக்கியமான சின்னத்திரை ரியாலிட்டி ஷோவாக உருவாகியுள்ளது பிக்பாஸ். தமிழில் அதை தொகுத்து வழங்குவதை கமல் மொத்தமாக குத்தகை எடுத்துவிட்டார். ஆனால் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதை பலர் தொகுத்து வழங்குகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 ஐ தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.
இதற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது அவர் ஒரு படத்துக்கும் வாங்கும் சம்பளத்துக்கு நிகரானது என சொல்லப்படுகிறது.