Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷும் உண்டு… சிவகார்த்திகேயனும் உண்டு – இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படங்கள்!

தனுஷும் உண்டு… சிவகார்த்திகேயனும் உண்டு – இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படங்கள்!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (16:30 IST)
இயக்குனர் ராம்குமார் இயக்கும் அடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். அந்த படம் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதைக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்துக் கொண்டாராம் ராம்குமார்.

இந்நிலையில் இப்போது முழு திரைக்கதையையும் முடித்துள்ள ராம்குமார், அதை தனுஷிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த கதை வேறு ஏதோ ஒரு படத்தின் தழுவல் என நினைக்கும் தனுஷ், இதுபற்றி இயக்குனரிடம் பேச இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து அந்த கூட்டணி உடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் ராம்குமார் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ராம்குமார் தரப்பில் இதை மறுத்துள்ளனர். தனுஷ் படத்தை இயக்க தாமதமாவதால் முதலில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிவிட்டு பின்னர் தனுஷ் படத்தை சிவகார்த்திகேயன் இயக்குவார் என சொலல்ப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகையின் செல்போன் பறிமுதல்