மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில் மற்றும் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள மல்டி ஸ்டாரர் படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை மாலிக் புகழ் மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.
இந்த படத்தின் மூலம் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளனர். கடைசியாக 2008 ஆம் ஆண்டு 20-20 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும் மோகன்லால் 30 நாட்களும் தேதிகளை ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் இளவயது டி ஏஜிங் காட்சிகள் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
இடையில் மம்மூட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது அவர் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாளை இந்த படத்தின் டீசரை வெளியிட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.