தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து ஹிட்ஸ்களைக் கொடுத்தவர் ஜீவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்தக் கதைகள் சொதப்பியதால் தற்போது மார்க்கெட்டிலேயே அவர் இல்லை. அதனால் மீண்டும் கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
சமீபத்தில் அவர் நடித்த ப்ளாக் படம் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றது. இதையடுத்து எம் ராஜேஷ் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ஹிட்டடித்த பேலிமி படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தலைவர் தம்பி தலைமையில் என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தைத் துபாயைச் சேர்ந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.