பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, இல்லாத ஒரு இடத்திற்கு விளம்பரம் செய்த நிலையில், அந்த விளம்பரத்தை நம்பி இடம் வாங்கிய நபர் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக, நுகர்வோர் ஆணையம் மகேஷ்பாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரங்காரெட்டி என்பவர், மகேஷ்பாபுவின் விளம்பரத்தை நம்பி இல்லாத ஒரு இடத்தை வாங்கி நஷ்டமடைந்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், கடந்த மாதம் அமலாக்க துறை சார்பில் மகேஷ்பாபுவுக்கும் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
 
									
										
			        							
								
																	
	 
	சாய் சூர்யா டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மகேஷ்பாபு ஒப்பந்தம் செய்திருந்தார் என்பதும், அதன் மூலம் சில கோடிகள் அவர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், தற்போது இல்லாத இடத்தை மகேஷ்பாபுவின் விளம்பரத்தை நம்பி வாங்கியதாக ரங்காரெட்டி நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புகாருக்கு  விளக்கம் கேட்டு மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக, அவர் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.