தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களில் பாடல்கள் எழுதியவர் சினேகன். ஆனால் அவரை பிரபலம் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் அவரின் தந்தை சிவசங்கு வந்தபோது அவரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். ஏனென்றால் பல ஆண்டுகளாக தன் தந்தையை சினேகன் சென்று பார்க்கவேயில்லை என்று தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அடிக்கடி தந்தையை சென்று பார்த்து அந்த புகைப்படங்களை சினேகன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்புக் காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 102.
தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டியில் அவரின் இறுதி சடங்குகள் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.