Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.எஸ்.எஸ். மற்றும் இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் இரட்டை குழந்தைகள்: கடுமையாக விமர்சித்த பினராயி விஜயன்!

Advertiesment
Tags: பினராயிவிஜயன்

Siva

, வியாழன், 2 அக்டோபர் 2025 (14:09 IST)
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இஸ்ரேலில் உள்ள சியோனிஸ்டுகளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் “இரட்டைக் குழந்தைகள்” என்றும், அவை “பல விஷயங்களில் ஒத்துப்போகக்கூடும்” என்றும் அவர் சாடியுள்ளார்.
 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை மத்திய அரசு கொண்டாடுவதை கடுமையாக விமர்சித்த பினரயி விஜயன் தனது 'எக்ஸ்' தளத்தில் கூறியிருப்பதாவது:
 
ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு விழாவுக்காக சிறப்பு அஞ்சல் தலை மற்றும் ₹100 நாணயம் வெளியிட்டது நமது அரசியலமைப்புக்குச் செய்யப்படும் மிகப்பெரிய அவமதிப்பு. விடுதலை போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை பரப்பும் ஒரு அமைப்பை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி இது.
 
இந்த அங்கீகாரம், உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்கள் கண்ட மதச்சார்பற்ற, ஒருங்கிணைந்த இந்தியாவின் கனவின் மீதான நேரடித் தாக்குதல். என்று பினராயி விஜயன் பேசினார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்.. பிரதமர் வெளியீடு..!