தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களில் பாடல்கள் எழுதியவர் சினேகன். ஆனால் அவரை பிரபலம் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி ஆகியோர் கமல்ஹாசன் முன்னிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் கன்னிகா கர்ப்பமாக இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் கன்னிகா ரவிக்கு பிரசவம் நடந்த நிலையில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தகவலை சினேகன் மற்றும் கன்னிகா ரவி தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் காதல் – கவிதை என்ற பெயர்களை சூட்டியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.