லோகா ஓடிடி குறித்து அறிவித்த ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

vinoth
வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:48 IST)
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ரிலீஸான  ‘லோகா’ படத்தின் ஜூரம் தற்போதுதான்  திரையரங்குகளில் குறைந்துள்ளது.  துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸானது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ‘லோகா’. 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தாமதம் ஆகிக் கொண்டே வந்தது. இந்நிலையில் இந்த படம் வரும் 31 ஆம் தேதி முதல் ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

மோகன்லால் வைத்துள்ள யானை தந்தம் லைசென்ஸ் செல்லாது! - நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

ராயன் படத்தில் இதனால்தான் நடிக்கவில்லை… விஷ்ணு விஷால் சொன்ன தகவல்!

இனி பாருங்க என் ஆட்டத்த..! TTF வாசனின் அனல் பறக்கும் IPL பட ட்ரெய்லர்!

ரஜினி & கமல் இணையும் படம் பற்றி அப்டேட் கொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments