200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 300 கோடி ரூபாயை நோக்கி செல்லும் லோகா!... இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர்!

vinoth
புதன், 10 செப்டம்பர் 2025 (08:23 IST)
துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படம் மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.  படம்  தற்போது 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மைல்கல்லை 13 நாட்களில் லோகா எட்டியுள்ளது.

இதன் மூலம் மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த நான்காவது திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. எதிர்பார்த்தததை விட அதிக வசூலைப் பெற்று வரும் லோகா திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தூசு தட்டப்படும் ரவி மோகனின் ‘ஜீனி’… முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

வெற்றிமாறன் & சிம்பு இணையும் ‘அரசன்’ படத்தின் கதாநாயகி சமந்தாவா?

சென்சார் செய்யப்பட்ட ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம்… தீபாவளிப் போட்டிக்குத் தயார்!

‘அஜித்’ எனக்கு அப்பா மாதிரி… ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி!

தனுஷுக்கு ‘அசுரன்’… சிம்புவுக்கு ‘அரசன்’- வெற்றிமாறன் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments