Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜார்ஜியாவில் லெஜெண்ட் சரவணன்! ஹாலிவுட் லெவலில் உருவாகும் இரண்டாவது படம்! - வைரலாகும் புகைப்படங்கள்!

Advertiesment
Legend Saravana

Prasanth Karthick

, திங்கள், 9 டிசம்பர் 2024 (14:15 IST)

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வரும் நிலையில் அதன் புகைப்படங்களை லெஜெண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார்.

 

 

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் முதலாளியான லெஜெண்ட் சரவணா திரைப்பட நடிப்பு கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ என்ற படத்தை தயாரித்து நாயகனாகவும் நடித்தார். விவேக், இந்தி நடிகை ஊர்வசி ரத்துலா உள்ளிட்ட பலர் நடிக்க பிரம்மாண்டமாக இந்த படம் தயாரானது.

 

ஆனால் எதிர்பார்த்த வண்ணம் இது திரையரங்குகளில் ஓடவில்லை. மேலும் ஓடிடியில் வெளியானபோதும் கிண்டல்களை சந்தித்தது. இந்நிலையில் தற்போது லெஜெண்ட் சரவணா இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான முதல் லுக் போஸ்டர் வெளியானபோதே பலரும் லெஜெண்ட் சரவணன் இந்த படத்தில் முந்தைய படத்தை விட சிறப்பாக தெரிவதாக பேசிக் கொண்டனர்.
 

 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி மற்றும் வட மாநிலங்களிலும் நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது. பட ஷூட்டிங்கில் பாயல் ராஜ்புத் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை லெஜெண்ட் சரவணா பகிர்ந்துள்ளார். இந்த இரண்டாவது படம் அவருக்கு சினிமா உலகில் நுழைவதற்கான திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா 2 - நெரிசலில் பெண் பலியான வழக்கு: 3 பேர் கைது! அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை எப்போது?