Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘டகரு' உரிமையை கைப்பற்றிய கொம்பன் இயக்குனர்

Advertiesment
டகரு முத்தையா Takaru Tamil Film Director muthaiya
, வெள்ளி, 26 அக்டோபர் 2018 (10:43 IST)
சசிக்குமாரை வைத்து ‘குட்டிப் புலி' படத்தை இயக்கிய முத்தையா, அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கொம்பன்', விஷாலுடன் இணைந்து ‘மருது' ஆகிய படங்களை இயக்கினார். தென்மாவட்ட கதைக்களமாகவே இவை அனைத்தும் இருந்தது. இந்த 3 படங்களுமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றன.
 
இதையடுத்து மீண்டும்  சசிகுமாருடன் தென்மாவட்ட பாணியில் ‘கொடிவீரன்' எனற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவிலலை. தற்போது ‘தேவராட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.
 
இதில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
 
இந்நிலையில், ‘டகரு' என்ற கன்னட படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் முத்தையா
கைப்பற்றி இருக்கிறார். ஷிவராஜ்குமார் ஹீரோவாக நடித்திருந்த ‘டகரு’ படம்
சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஒட்டாரம் பண்ணாத' : ஓவியா-விமலின் கலக்கும் 'களவாணி 2'பாடல்