Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடகர் கே கே பாடிய கடைசி தமிழ்ப் பாடல்… வீடியோவைப் பகிர்ந்த இயக்குனர்கள்!

Advertiesment
பாடகர் கே கே பாடிய கடைசி தமிழ்ப் பாடல்… வீடியோவைப் பகிர்ந்த இயக்குனர்கள்!
, புதன், 1 ஜூன் 2022 (15:47 IST)
பிரபல பாடகர் கே கே நேற்று திடீரென்று மறைந்தது இசை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் பாடகர் கே கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தி லெஜண்ட் படத்தில் இரண்டு பாடல்களை அவர் பாடியிருந்தார். அதில் கொஞ்சி கொஞ்சி என்ற பாடல் பதிவின் ரெக்கார்டிங்கின் போது எடுத்த வீடியோவை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி பகிர, அது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jd Jerry (@dir_jdjerry)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல நாட்களுக்குப் பிறகு வெளியான கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம்… இணையத்தில் வைரல்!