பிரபல பாடகரான கே.கே திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும் என மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் பிரபலமான திரையிசை பாடகராக இருந்து வந்தவர் கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கே.கே சிறுவயதிலேயே பெற்றோருடன் மேற்கு வங்கத்தில் குடியேறினார்.
பல ஆயிரம் விளம்பரங்களுக்கு பாடல்கள் பாடிய கே.கே, பின்னர் திரை பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே.கே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி உள்பட்ட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் பாடகர் கே.கே உடலுக்கு மேற்கு வங்க விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.