Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல நாட்களுக்குப் பிறகு வெளியான கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம்… இணையத்தில் வைரல்!

பல நாட்களுக்குப் பிறகு வெளியான கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம்… இணையத்தில் வைரல்!
, புதன், 1 ஜூன் 2022 (15:06 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார் பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகர் விஜயகாந்த் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது சம்மந்தமான அன்புமணி ராமதாஸ் “பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு. விஜயகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றேன்.” எனக் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான மாஸ் லுக் புகைப்படம்!