பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை மான்சாவில் உள்ள அவருடைய வீட்டில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
சித்து மூஸ்வாலாவின் உடல் இன்று காலையில் மான்சா சிவில் மருத்துவமனையில் இருந்து அவருடைய உறவினர்களால் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய இறுதிச் சடங்களில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் கூடினர்.
சித்து மூஸ்வாலாவின் இறுதிச் சடங்குகள், இன்று அவரது சொந்த கிராமமான மூசாவில் நடைபெறும். அவர் ஞாயிற்றுக் கிழமையன்று மான்சாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கள் கிழமை, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக அவரது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூஸ்வாலாவின் உடலில் 25 தோட்டாக் காயங்கள் இருப்பதாகவும் அவருடைய கையில் எலும்பு காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.