நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 24 நவம்பர் 2025 (10:25 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துப் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். அதே நேரம் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ’நடிகையர் திலகம்’ மற்றும் ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘ரகுதாத்தா’ போன்ற படங்களிலும் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

நடிகையர் திலகம் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அளிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னிந்திய சினிமாத் தாண்டி அவர் பாலிவுட்டிலும் ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் கால்பதித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்தபடம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது பகிர்ந்த தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “சொன்னா நம்ப மாட்டீங்க. நடிகையர் திலகம் படம் வந்தபோது அடுத்த ஆறு மாதத்துக்கு எனக்கு எந்த படமும் வரவில்லை. யாரும் என்னிடம் கதை சொல்ல கூட வரவில்லை. அப்போதுதான் நான் நினைத்துக் கொண்டேன். எனக்கான தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அந்த நேரத்தை என்னைத் தயார்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன் முகம்தான் அதற்கு சரியாக இருக்கிறது… ஆனந்த் எல் ராயை செல்லமாகக் கோபித்த தனுஷ்!

வார நாட்களிலும் பெரிதாக ஏறாத வசூல்… மாஸ்க் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம்!

பூஜையோடு தொடங்கிய பிரபாஸின் ‘ஸ்பிரிட்’… சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிரஞ்சீவி!

புதிய இசை வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் அனிருத்.. முதல் படமாக ‘அரசன்’!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments