பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார் காத்ரீனா கைஃப். இவருக்கும் நடிகர் சல்மான் கானும் காதலர்களாக வலம் வந்த போது இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். ஆனால் அவர்கள் காதல் பிரிந்தது. அதன் பின்னர் தன்னைவிட இளையவரான சக நடிகர் விக்கி கௌஷலுடன் அவருக்குக் காதல் மலர்ந்தது.
பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்த விக்கி கௌஷல் மற்றும் காத்ரினா கைஃப் ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த பின்னரும் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது காத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதை இத்தம்பதியினர் வெளியுலகுக்கு அறிவித்துள்ளனர். காத்ரினா நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் புகைப்படத்தை அவர்கள் பகிர ரசிகர்கள் வாழ்த்து மழைப் பொழிந்து வருகின்றனர்.