தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் கதாநாயக நடிகராக அறிமுகமானார் சாந்தணு. 2008 ஆம் ஆண்டு வெளியான இவரின் சக்கரக்கட்டி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி தோல்விப் படமானது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்ஸ்களாக அமைந்திருந்தன.
அதன் பிறகு 17 ஆண்டுகளாக அவர் சினிமாவில் ஒரு நல்ல விமர்சன- வணிக வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இடையில் சில நல்ல படங்களில் நடித்தாலும் அவை அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமையவில்லை. இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் ஷேன் நிகாமுடன் இணைந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தன்னிடம் கடந்த காலத்தில் இருந்த குறையைப் பற்றி பேசியுள்ளார். அதில் “விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் மணிகண்டன் போன்றவர்கள் சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொன்றாகக் கற்று மேலே வந்தவர்கள். என்னிடம் அந்த கற்றல் மனப்பாண்மை இல்லை என்பதை உணர்ந்துள்ளேன். இவர்களி முன்னுதாரணமாகக் கொண்டு அடிமட்டத்தில் இருந்து உழைத்து மேலே வரவேண்டும் என இப்போது உழைக்கத் தொடங்கியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.