பாலிவுட் நட்சத்திர ஜோடியான கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் விரைவில் பெற்றோராக போகும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தங்கள் இன்ஸ்டா பக்கத்தில், கத்ரினா மற்றும் விக்கி ஒரு உணர்வுபூர்வமான பதிவை வெளியிட்டனர். அதில், “நிறைந்த மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் எங்கள் வாழ்க்கையின் சிறந்த அத்தியாயத்தை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், விக்கி, கத்ரினாவின் கர்ப்பிணி வயிற்றை பாசத்துடன் தொட்டுக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
 
									
										
			        							
								
																	
	 
	இந்த அறிவிப்பு வெளியான சில நொடிகளிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	2021-ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் நடந்த பிரமாண்டமான திருமணத்திற்கு பிறகு, கத்ரினா-விக்கி ஜோடி பாலிவுட்டில் அதிகம் விரும்பப்படும் தம்பதியாக உள்ளனர். இவர்களது சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர்களது அன்யோன்யம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்போது, பெற்றோராகப் போகும் செய்தி அவர்களின் காதலுக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.