அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள மதராஸி படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. கடந்த காலங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் மதராஸி படம் அமைந்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த படத்தில் வித்யுத் ஜமால், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படம் முதல் ஐந்து நாட்களில் சுமார் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் தற்போது படம் ரிலீஸாகி ஒன்பதாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக ஆன்லைன் டிராக்கிங் தளமான sacnilk தெரிவித்துள்ளது. விரைவில் இந்த படம் உலகளவி 100 கோடி ரூபாய் வசூலைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.