துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படம் மோகன்லாலின் ஹ்ருத்யபூர்வம் திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படம் தற்போது 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மைல்கல்லை 13 நாட்களில் லோகா எட்டியுள்ளது. இதன் மூலம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த நான்காவது படம் என்ற சாதனையை தற்போது பெற்றுள்ளது.
மூன்றாவது வாரத்திலும் லோகா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான காந்தா ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.