பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் சென்சார் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெற்ற அதீத வன்முறைக் காட்சிகளால் படத்துக்குத் தணிக்கை வழங்க சென்சார் குழு மறுத்துள்ளது. இதையடுத்து மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களும் சிலக் காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வெட்ட சொல்லியுள்ளனர். அதற்குப் படக்குழு ஒப்புதல் தெரிவிக்க படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.