Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீகாந்த் கொடுத்த தகவல்! மூன்றெழுத்து நடிகர், இளம் நடிகை உட்பட 10 திரைப்பிரபலங்கள் சிக்கலில்?

Advertiesment
Srikanth drug case

Prasanth K

, வியாழன், 26 ஜூன் 2025 (09:53 IST)

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பல திரை பிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் 2000களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது குறைவான பட வாய்ப்புகளே உள்ள நிலையில் சுற்றி வரும் ஸ்ரீகாந்த் சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஸ்ரீகாந்த்க்கு போதைப்பொருளை விநியோகித்ததாக பட தயாரிப்பாளரும், அதிமுக முன்னாள் பிரமுகருமான பிரசாத் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் ஸ்ரீகாந்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஒளிவு மறைவின்றி சினிமா உலகில் வலம் வரும் போதைப்பொருள் பயன்பாடு குறித்தும் மொத்தமாக கூறிவிட்டாராம் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்துதான் நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளார். மேலும் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் 10 பேர் பெயர் அடிபட்டுள்ளதாக தகவல்.

 

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள அந்த மூன்றெழுத்து பக்திவாய்ந்த நடிகரின் பெயரும் அந்த பட்டியலில் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது, காவல்துறை அடுத்தடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளில் எந்தெந்த நடிகர்கள் சிக்குவார்களோ என்ற பரபரப்பு எழுந்து சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தாரா மாதிரி PAN இந்தியா படம் பண்ணப் போறேன் –விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!