Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோசமான தரம்.. ‘இந்தியன்’ படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் அதிருப்தி..!

மோசமான தரம்.. ‘இந்தியன்’ படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் அதிருப்தி..!

Siva

, ஞாயிறு, 9 ஜூன் 2024 (16:02 IST)
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான ‘இந்தியன்’ திரைப்படம் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் நேற்று முன் தினம் தமிழகம் முழுவதும் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பது தெரிந்தது. 
 
இந்த கால இளைஞர்கள் ‘இந்தியன்’ படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் இல்லை என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றனர். ஆனால் தியேட்டரில் பிரிண்ட் மிகவும் மோசமாக இருந்ததாகவும், கலர் சரியில்லை என்றும், சவுண்டு குவாலிட்டியும் சரியில்லை என்றும் படம் பார்த்தவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
கில்லி திரைப்படம் ரீரிலீஸ் செய்யும்போது ரீ மாஸ்டர் செய்யப்பட்டு பக்காவாக சவுண்ட் சிஸ்டம் செய்யப்பட்டது. ஆனால் ‘இந்தியன்’ படத்தின் சவுண்ட் சிஸ்டம் மற்றும் படத்தின் கிளாரிட்டி இல்லை என்றும் முதல் நாள் இந்த படத்தை பார்த்தவர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த படத்தை குவாலிட்டியாக கொடுத்திருந்தால் கண்டிப்பாக மக்கள் ஏற்கும் வகையில் இருந்திருக்கும் என்றும் ஆனால் தற்போது இந்த படத்திற்கு கூட்டமே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யுடன் நடிக்க ரொம்ப நாள் ஆசை..! கடைசி படத்திற்கு ரூட் போட்ட பாலிவுட் இளம் நடிகை!