Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுப் படங்களின் வசூலை மிஞ்சிய இந்தியன்… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

புதுப் படங்களின் வசூலை மிஞ்சிய இந்தியன்… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

vinoth

, சனி, 8 ஜூன் 2024 (15:27 IST)
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூலை 12 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது.

இதற்கிடையில் இந்தியன் 2 படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தியன் முதல் பாகத்தை ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்தனர். இதையடுத்து படத்துக்கு புதிய டிரைலர் எல்லாம் வெளியிடப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டன. படம் நேற்று கணிசமான எண்ணிக்கையிலான திரைகளில் ரிலீஸானது.

இந்நிலையில் இந்த படம் நேற்று வெளியான ஹரா, வெப்பன் போன்ற புதிய படங்களின் வசூலை விட அதிகமாக வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று வெள்ளிக் கிழமையில் மட்டும் 1.1 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வார இறுதி நாட்களில் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதீப் &அஸ்வத் மாரிமுத்துவின் ‘டிராகன்’ படத்தில் இணையும் இரண்டு முன்னணி கதாநாயகிகள்!