Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

Advertiesment
Ajith

Bala

, ஞாயிறு, 23 நவம்பர் 2025 (10:57 IST)
கடந்த இரு தினங்களாக அஜித் மீது ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. அதாவது ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பாளர் காஜாமுகைதீன் தற்கொலைக்கு முயன்றார். அதற்கு அஜித்தான் காரணம் என ஒரு செய்தி பரவி வருகிறது. அஜித்தை வைத்து ஜனா படத்தை தயாரித்த காஜா முகைதீனுக்கு அந்தப் படத்தால் 9 கோடி வரை நஷ்டம். அதனால் தற்கொலைக்கு முயன்றேன் என ஒரு பேட்டியில் காஜா முகைதீன் கூறியிருப்பார். இது அஜித்தான் காரணம் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி ஆஸ்கார் தயாரிப்பாளர் செந்தில் பிரபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
 
அஜித்தின் ஆரம்பகால மேலாளர் மாதிரி அஜித்தின் எல்லா கால்ஷீட்டுகளையும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் பார்த்துக் கொண்டிருந்தாராம். முதன் முதலில் அஜித்தை வைத்து ராசி படத்தை எடுத்தவர்தான் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அந்தப் படத்திலிருந்து அஜித்துக்கும் அவருக்கும் நல்ல நட்பு உருவாகியிர்க்கிறது. அதிலிருந்தே நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு அலுவலகத்தில் அஜித்துக்கு என தனி அறையும் ஒதுக்கப்பட்டுவிட்டதாம். அஜித்தின் கால்ஷீட்டுகளையும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
 
அந்த நேரத்தில்தான் காஜாமுகைதீன் அஜித்தை வைத்து ஆனந்த பூங்காற்றே படத்தை எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் போது அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடக்க அவருக்கு பதில் பிரசாந்த் உள்ள வர அந்த கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு ஆனந்த பூங்காற்றே படத்தை அஜித்தை வைத்து எடுத்து அந்தப் படம் அவருக்கு பெரிய ஹிட். இந்தப் பக்கம் நிக் ஆர்ட்ஸ் அஜித்தை வைத்து எடுத்த படங்கள் தொடர்ந்து தோல்விப் படங்களாகவே மாறுகிறது.

webdunia
 



















ஒரு சமயம் காஜா முகைதீன் மீண்டும் அஜித்தை வைத்து படம் எடுக்க முயல்கிறார். அவருக்கான அட்வான்ஸ் தொகையை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் இருந்து பெறுகிறார். அதிலிருந்து காஜாமுகைதீன் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் அஜித்தின் கால்ஷீட்டுக்காக அலைகிறார். ஆனால் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அஜித்தின் கால்ஷீட்டை தள்ளி தள்ளி போடுகிறார். கடைசியாக மலையாளத்தில் மம்மூட்டி நடித்த கலிகாலம் படத்தின் ரீமேக்கை காஜாமுகைதீனிடம் வாங்க சொல்கிறார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அவர் சொன்னதை போல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு காஜா முகைதீனும் அந்தப் படத்தின் ரீமேக்கை வாங்குகிறார்.
 
அந்த நேரத்தில்தான் அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி வில்லன் என்ற படத்தை எடுக்கிறார். அந்தப் படத்தில் காஜா முகைதீன் வாங்கிய கலிகாலம் படத்தின் சில காட்சிகள் இருப்பதை பார்த்து காஜாமுகைதீன் அதிர்ச்சி ஆகிறார். இது எதுவுமே அஜித்துக்கு தெரியாதாம். ஆனால் காஜா முகைதீன் நடந்த எல்லாவற்றையும் அஜித்திடம் சொல்கிறார். உடனே அஜித் காஜாமுகைதீனுக்கு கால்ஷீட் கொடுக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம்தான் ஜனா. அந்தப் படம்தான் காஜாமுகைதீனுக்கு பெரிய நஷ்டமான படமாக மாறுகிறது. கிட்டத்தட்ட 9 கோடி நஷ்டமடைகிறார். அந்த நேரத்தில்தான் காஜா  முகைதீன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஜனா படத்தால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என காஜா முகைதீன் சொல்லியிருப்பார். அஜித்தால் என சொல்லியிருக்க மாட்டார். 
 
ஆனால் அஜித்தான் கால்ஷீட் கொடுக்காமல் காஜாமுகைதீனை அலைக்கழித்தார் என்று வெளியில் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு காரணமே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதானாம். கடைசியில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அஜித்தை வைத்து வரலாறு படத்தை எடுக்கிறார். ஆனால் அதை ரிலீஸ் பண்ண  முடியாமல் கடன் காரர்கள் சூழ அதை அஜித்தான் கட்டினாராம். அதன் பிறகுதான் வரலாறு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதற்கு பிறகுதான் அஜித் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் இருந்து பிரிகிறார். ஆனால் உண்மையில் அஜித்துக்கும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் என்ன நடந்தது என யாருக்குமே தெரியாது என தயாரிப்பாளர் செந்தில் பிரபு விளக்கமளித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..