திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொண்டு தற்போது ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். தனது குழந்தைக்கு நீதி வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இது சம்மந்தமாக அவர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இது சம்மந்தமாக சென்னைக் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகின்றது. அந்த வழக்கில் “நான் கர்ப்பமாக இருப்பதால் என்னால் இப்போது ஆடை வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது. அதனால் எனக்கு குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக மாதம் 6.5 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்துள்ளார்.