ஜெயம் ரவியின் ‘அகிலன்’ சென்சார் தகவல் இதோ..!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (21:19 IST)
ஜெயம் ரவி நடித்த அகிலன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. அகிலன் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அகிலன் படத்தின் புரோமோஷன் பணியை தொடங்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜெயம் ரவி த்ரிஷா நடித்த பூலோகம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாக்கி உள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
 
மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments