தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த படம் நிச்சயம் தனுஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் வாத்தி திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 139 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 19 நிமிடங்கள் ரன்னிங் டைம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	ஒரு வெற்றி படத்திற்கு தேவையான சரியான ரன்னிங் டைம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.